Skip to content
Home » அரியலூரில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

அரியலூரில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 149.43 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது.

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 3083 மெ.டன் யூரியா, 1119 மெ.டன் டி.ஏ.பி 232 மெ.டன் பொட்டாஷ்; மற்றும்; 2066 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது.
இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள்; வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் மூலம் 21 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 40 மெ.டன் என கூடுதலாக 61 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 13.0 மெ.டன்; நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி 3000 எக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டா வட்டாரங்களான திருமானூர், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரங்களில் இதுவரை 240 எக்டரும் இதர வட்டாரங்களான அரியலூர், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டாரங்களில் 20 எக்டரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான வேளாண் உபகாரணங்கள், சிங்சல்பேட், பேட்டரி தெளிப்பான், உயிர் உரங்கள், அனைத்தும் மானிய விலையில் வழங்க தயார் நிலையில் உள்ளது.

வேளாண் அடுக்குத் திட்டம்: தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெரும் வகையில் வேளாண்மைத்துறையில் வேளாண்மை அடுக்குத் திட்டம் உருவாக்கப்பட்டள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்கள் ஆகியவை கிரைன்ஸ் என்ற இணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. கிரைன்ஸ் வலைதளத்தின் மூலம் அரசின் நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதிபடுத்திட முடியும்.

இது ஒற்றை சாரல வலைதளமாக செயல்படுவதால் விவசாயிகள் 13 துறைசார்ந்த திட்டங்களுக்கும், ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். எனவே பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக உரிய ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆகியோர்களை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!