அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆண்டிமடம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேரில் ஆய்வு செய்தார். 2வது நாளாக ஆண்டிமடம் வட்டம், மருதூர் ஊராட்சியில் செங்குந்தர் தெரு மற்றும் காலனி தெரு பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை பார்வையிட்டு, நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்படும் நாட்களின் விவரம், குளோரின் பயன்படுத்தப்படும் முறைகள் மற்றும் அளவு, குடிநீர் விநியோகம் செய்யப்படும் நேரம்
உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், நீர்த்தேக்க தொட்டியினை குறிபிடப்பட்டுள்ள நாட்களில் முறையாக தொடர்ந்து சுத்தம் செய்திட வேண்டும் எனவும், அனைத்து பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் குடிநீர் தொடர்ச்சியாக கிடைக்கின்றதா என பொதுமக்களிடம் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி கேட்டறிந்தார். இந்த ஆய்வில் ஆண்டிமடம் வட்டாட்சியர் ராஜமூர்த்தி, செயற்யற்பொறியாளர் மாது, மாவட்ட நிலை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் இதர துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.