Skip to content

வரும் 8ம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம்… அரியலூர் கலெக்டர் தகவல்….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம், 08.04.2023 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற உள்ளது. மேற்கண்ட கூட்டத்தினை, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். அக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொள்வார்கள். மேலும், அக்கூட்டம் நடத்தப்படுவதை மேற்பார்வை செய்திட அரியலூர் வட்டம், மேலப்பழுவூர், கிராமத்திற்கு மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் அரியலூர், உடையார்பாளையம் வட்டம், தர்மசமுத்திரம் கிராமத்திற்கு தனித்துணை ஆட்சியர், சமூக பாதுகாப்புத் திட்டம் அரியலூர், செந்துறை வட்டம், வஞ்சினபுரம் கிராமத்திற்கு துணை பதிவாளர்(பொ.வி.தி) அரியலூர், ஆண்டிமடம் வட்டம், விளந்தை (வடக்கு) கிராமத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அரியலூர், ஆகியோர் மேற்பார்வை அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, அக்கூட்டத்தில், பொதுமக்கள் நியாய விலைக் கடைகள் தொடர்பான குறைகளைத் தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேசன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல், குடும்பத் தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்பத் தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் படி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!