Skip to content
Home » வேலையை உறுதி செய்த பின் வெளிநாடு செல்லுங்கள்..அரியலூர் கலெக்டர் அட்வைஸ்

வேலையை உறுதி செய்த பின் வெளிநாடு செல்லுங்கள்..அரியலூர் கலெக்டர் அட்வைஸ்

 

வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்விப் பயின்ற இளைஞர்களை சமூக வலைதளம் மூலமாக மூளைச்சலவை செய்யப்பட்டு கம்போடியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ‘டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ (Digital Sales and Marketing Executive) ‘தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) வேலை, ‘அதிக சம்பளம்’ என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால் – சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி (Online scamming) போன்ற சட்ட விரோத செயல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும், அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாவும் தொடர்ந்து தகவல் பெறப்படுகிறது.

இனிவரும் காலங்களில், இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம். வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? போன்ற விவரங்களைச் சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டும். அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிடில் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை அல்லது குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலர், சென்னை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டும், இந்திய வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்குச் செல்லும் நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும். வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு இளைஞர்கள், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பாக திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம். கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இதுபோன்று அதிக அளவில் இளைஞர்கள் ஏமாற்றப்படுகின்றனர் எனவும், வீட்டு வேலை செய்ய வெளிநாடு செல்பவர்கள் எளிதாக ஏமாற்றப்பட்டு பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் விவரங்களை www.emigrate.gov.in இணையதளத்தில் அறிந்து கொண்டும், மேலும், சென்னை குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண். 9042149222 மூலமாகவும் மற்றும் poechennai1@mea.gov.in, poechennai2@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், வெளிநாடுகளிலுள்ள தமிழர்களுக்கு உதவிபுரிய தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத் துறை” செயல்பட்டு வருகிறது,

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின்; கட்டணமில்லா 24 மணி நேர அழைப்புதவி மையத்தின் பின்வரும் தொடர்பு எண்கள் (1).18003093793 (2).8069009901 (3).8069009900 (missedcall No) பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!