இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வரைவு வாக்காளர் பட்டியல் 27.10.2023 அன்று வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 4.11.2023, 5.11.2023 மற்றும் 25.11.2023, 26.11.2023 ஆகிய தினங்களில் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் நடைபெற்று பொதுமக்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டது.
பின்னர் இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களால் கள ஆய்வு செய்து படிவங்கள் மீது தீர்வு காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டவாறு 5.1.2024 அன்று வெளியிடப்பட வேண்டிய இறுதி வாக்காளர் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 22.01.2024 அன்று வெளியிடப்படும் என்று அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.