அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி அலுவலகம் மற்றும் செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெற்ற (CMCHIS – AB – PMJAY) முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளைச் சேர்ப்பதற்கான சிறப்பு காப்பீட்டு திட்ட பதிவு செய்யும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா இன்று நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா அவர்கள் கலந்துகொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் கிடைத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றையதினம் அரியலூர் நகராட்சி அலுவலகம் மற்றும் செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளைச் சேர்ப்பதற்கான சிறப்பு காப்பீட்டு திட்ட பதிவு முகாமினை பார்வையிட்டு, இடவசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும், மனுக்கள் உரிய ஆவணங்களுடன் இணைக்கப்பட்டு பெறப்படுகிறதா என்பதும் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன், பொதுமக்களிடமிருந்து காலதாமதமின்றி மனுக்களை பெற்று விரைவாக பதிவு செய்திட வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் இணை இயக்குநர் (குடும்பநலம்) மரு.இளவரசன், வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), திரு.பரிமளம் (உடையார்பாளையம்), வட்டாட்சியர் (அரியலூர்) ஆனந்தவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.