தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று 03.03.2025 துவங்கி உள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 92 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 4,325 மாணவர்களும், 4,454 மாணவிகளும் என ஆக மொத்தம் 8,779 மாணவ / மாணவிகள் 45 தேர்வு மையங்களில் தேர்வினை எழுத உள்ளனர். அதே போன்று தனித் தேர்வர்கள் 44 ஆண்களும், 44 பெண்களும் என மொத்தம் 88 நபர்கள் தேர்வினை எழுதினர்.
இன்று நடைபெற்ற 12 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 4187 மாணவர்களும், 4384 மாணவிகளும் என மொத்தம் 8571 மாணவ மாணவிகள் தேர்வினை எழுதினர். மேலும் 138 மாணவர்களும், 70 மாணவிகளும் என மொத்தம் 208 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.
தனித்தேர்வர்களில் 40 ஆண்களும், 40 பெண்களும் என மொத்தம் 80 நபர்கள் தேர்வு எழுதினர். மேலும் 4 ஆண்களும், 4 பெண்களும் என மொத்தம் 8 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை.
அரசு பொதுத்தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு ஆய்வு அலுவலர்கள் 7 பறக்கும் படையாக அமைத்தும், தேர்வு மையங்களை கண்காணிக்க நிலையான பறக்கும் படை 92 முதுகலை ஆசிரியர்களும், தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக 626 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். தேர்வுப்பணிகள் சார்ந்து தேர்வு நடைபெறும் நாட்களில் குடிநீர் வசதி, மின் விசிறிகள், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கிடவும், மாணவ / மாணவிகள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்கு தேர்வெழுத ஏதுவாக போதிய பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை உறுதிபடுத்திடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் தேர்வுகள் அமைதியாக நடைபெற ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆயுதம் தாங்கிய காவலர் உட்பட போதிய காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தெரிவித்தார்;.
இன்று தேர்வு தொடங்கியதையடுத்து கலெக்டர் ரத்தினசாமி அரியலூர் அரசு மேல்நிலைப்பளி தேர்வு மையத்தினை திடீர் ஆய்வு செய்து ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவானந்தன், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.