அரியலூர் மாவட்டம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க முதற்கட்டமாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 10519 தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் சென்னைக்கு லாரி மூலம் 06.12.2023 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள் மூலம் நிவாரண பொருட்கள் ஏற்பாடு செய்து 20230 தண்ணீர் பாட்டில்கள்,19778 பிஸ்கட் பாக்கெட்கள், 1274பால் பவுடர்கள், 1063 ரஸ்க் பாக்கெட்கள், சேமியா, காபி பவுடர், அரிசி -400 கிலோ, 235 பக்கெட்கள், கோதுமை 51 கிலோ, ரவா-62 கிலோ, ஆயில்-30 லிட்டர், குழந்தைகள் துணி-59, மெழுகுவர்த்தி-730, கொசுவர்த்தி-190, துண்டுகள்-846, போர்வைகள்-645, ராகி -80 கிலோ, சாக்லேட்கள், கைலிகள்-834, நைட்டிகள்-325, நாப்கின்-351, சேலைகள்-550, டுத் பேஸ்ட்-281, சோப், சர்ட், பேன்ட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் ரூ.8.67 இலட்சம் மதிப்பிட்டில் இரண்டு லாரிகள் மூலம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், நிவாரண பொருட்கள் வழங்க விரும்பும் தன்னார்வலர்கள் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகத்தை அணுகி நிவாரண பொருட்களை வழங்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர்(அரியலூர்) ஆனந்தவேல், வட்டாட்சியர்(பேரிடர் மேலாண்மை) சந்திரசேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.