சென்னை ஆவடி பருத்திப்பட்டுத் தெருவை சேர்ந்தவர் மனோகர்(65). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரும், இவரது மனைவி பானுமதி (57) அவரது உறவினரான கும்பகோணம் மகாமககுளத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி (73) ஆகிய மூவரும் சென்றனர் உடன் சென்னை சிட்லபாக்கம் லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த கார் டிரைவர் சபரிவாசன் ஓட்டிக்கொண்டு சென்னையில் இருந்து புறப்பட்டு கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். பின்னர் மீண்டும் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் சென்னை செல்வதற்காக ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் ரோட்டில் ராங்கியம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அப்பகுதி பஸ் நிறுத்தம் அருகே இருந்த கொடி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மனோகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் சபரிகிரிவாசன், விபத்தில் இறந்து போன மனோகர் மனைவி பானுமதி, உறவினர் புவனேஸ்வரி, ஆகிய மூவரும் லேசான காயங்களுடன் உயிர்த்தபினர். இதனை அவ்வழியைச் சென்றவர்கள் ஆம்புலன்ஸ் வரவைத்து அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சபரி வாசன் பானுமதி புவனேஸ்வரி ஆகிய மூவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பானுமதிக்கு கணவர் இறந்த சம்பவம் தெரியாமல் மயக்க நிலையில் இருந்து வருகிறார். இது குறித்து சம்பவம் அடைந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடம் சென்று இறந்து போன மனோகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
