அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்த உள்ள அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், புத்தகத்
திருவிழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.