சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று தனது வேட்பு மனுவை, சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் கார்த்தியாயினி தாக்கல் செய்தார். அவருடன் பாஜக மாநில பட்டியல அணி தலைவர் தடா. பெரியசாமி, அரியலூர் பாஜக மாவட்ட தலைவர் அய்யப்பன், வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி, பாமக அரியலூர் மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் உடன் வந்தனர்.