அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வஞ்சினபுரம் காலனி தெருவில் காலை நேரத்தில் பாம்பாட்டி வாலிபர் ஒருவர் பாம்பை வைத்து வித்தை காட்டி கூட்டம் சேர்த்துள்ளார். அப்போது வித்தை காட்டி பிச்சை எடுத்துள்ளான். வசூல் செய்த பிறகு பாம்பை வைத்து வித்தை காட்டுவது போல் பேசி நான் பாம்பை வெளியில் விடுவேன் அப்போது நீங்கள் இரண்டு காலையும் சேர்த்து வைத்து கையை நீட்டி நில்லுங்கள் காசு கொடுக்காதவங்களும் நிற்கலாம் என கூறி அவ்வாறு பாம்பின் மீது உங்கள் கை நிழல் விழும் போது உங்கள் பாவம் தோஷம் நீங்கும் என கூறியுள்ளார். அவ்வாறு பொது மக்கள் நின்றுள்ளனர்.
பின்னர் கூட்டத்தை கலைந்து போங்கள் நான் ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து தோஷம் நீக்குகிறேன் என கூறி பின்னர் பிள்ளை பாக்கியம் வேண்டும் என்பவர்களின் வீட்டிற்க்கு சென்று ள்ளான். ஜெயக்கொடி என்பவர் வீட்டுக்கு சென்று 3 ஆண்டுகள் பிள்ளை இல்லாத அவரது பெண்ணுக்கு தோஷம் நீக்க 15 ஆயிரம் கேட்டுள்ளான். அவர்கள் g pay செய்வதாக கூறியுள்ளனர். உடனே வேண்டாம் என கூறிய பாம்பாட்டி நகையை கழட்டி வைக்க சொல்லியுள்ளான்.
அவ்வாறு முக்கால் பவுன் செயின் மற்றும் கால் பவுன் மோதிரத்தை கழட்டி வைத்துள்ளனர். தோஷம் நீக்குகிறேன் என கூறி அவர்கள் அசந்த நேரத்தில் அந்த இடத்தை விட்டு நகையுடன் பைக்கில் தப்பி ஓடி யுள்ளார். இது குறித்து செந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.