அரியலூர் குறும்பன்சாவடி பகுதியில் கருப்பசாமி கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு ஆடி மாதம் முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். முன்னதாக இருசுக்குட்டை ஏரிக்கரை விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் கரகத்திற்கு பூஜை செய்து பால்குடத்துடன் பெண்கள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.
இதனையடுத்து பக்தர்கள் சுமந்து வந்த பாலை, சல்லடை அமைத்து அதன் மூலம் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் மற்றும் தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீமகா மாரியம்மனை தரிசனம் செய்தனர்