அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில்
மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அனிதா அரங்கத்தில், மாவட்ட நீதித்துறையின் சார்பில் நடைபெற்ற பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி T.மலர்வாலண்டினா, M.L., தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபக் சிவாச் முன்னிலையில் நடைபெற்றது.
கருத்தரங்கில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி பேசியதாவது,
பாலினம் சமத்துவம் என்பது மக்களுடைய மனநிலையிலேயே தோன்றவேண்டும். பாலினம் சமத்துவம் அனைத்து தரப்பு மக்களிடையே இயற்கையாகவே மனதில் ஏற்படவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இத்தகைய விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. குற்றங்கள் ஏதும் கண்டறியப்பட்டால் அதற்கான சட்டப்படியான தண்டணைகள், குற்றங்களை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், இதனை எவ்வகையி;ல் அணுகவேண்டும் என்பதற்கான ஆலோசனைகள் உள்ளிட்டவற்றை பொதுமக்களிடம் எடுத்துச்செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலத்துறையின் சார்பில் இதுதொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் பள்ளி, கல்லூரிகளிலும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நீதித்துறை இத்தகைய சட்ட விழிப்புணர்வு முகாம்களை நடத்துவது சமூகத்தில் மிகப்பெரிய பலனை அளிக்கும். மேலும், மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்.
பாலின சமத்துவம் உள்ளிட்ட திட்டங்கள் எதுவாக இருப்பினும் அதனை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கின்றது. பெண்கல்வி முன்னேற்றம் பெறவேண்டும். பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற வேண்டும் என்பதன் அடிப்படையில், பெண்கல்வியினை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுலகங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே அனைவரும் இத்தகைய விழிப்புணர்வினை பொதுமக்களிடையே கொண்டு செல்லவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி பேசினார்.
கருத்தரங்கில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி பேசியதாவது,
அனைத்து வகையான படிப்பிலும் பெண்களின் விகிதாசாரம் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகி கொண்டுதான் வருகிறது. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு அரசு தேர்வுகள், போட்டித்தேர்வுகள் ஆகிய அனைத்திலும் பெண்களின் பங்களிப்பு மற்றும் அவர்களுடைய வெற்றி விகிதாசாரமும் அதிகமாகத்தான் உள்ளது. அனைத்து தரப்பு பெண்களுக்கு எதிராக நடைபெறும் துன்புறுத்தல்களை நீக்கவேண்டும் என்பதற்காகவும், அதற்கு அனைத்து துறை ஊழியர்களின் செயல்பாடு தேவை என்பதற்காகவும் இத்தகைய கருத்தரங்கினை உயர்நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளது. சமத்துவ சமுதாயம் அமைக்க வேண்டும் என்றால் இதுபோன்ற பிரச்சனைகளை அகற்றி, ஆணும், பெண்ணும் முன்னேறினால் மட்டுமே சமத்துவ சமுதாயம் அமையும் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி T.மலர்வாலண்டினா, M.L., பேசினார்.
இக்கருத்தரங்கில் Chairperson> GSICC/ Judge, Family Court, Ariyalur D.செல்வம்,M.L., அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துக்கிருஷ்ணன், Chief Judicial Magistrate, Ariyalur எம்.எஸ்.மணிமேகலை,L.L.M., அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, காவல் துறையினர், அரசு அலுவலர்கள், நீதிமன்ற அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.