அரியலூர் மாவட்டம், திருமானூர் ஆட்டோ தொழிலாளர் சங்க கிளைக் கூட்டம் நடைபெற்றது.கிளை தலைவர் அலாவுதீன் தலைமையில், சி ஐ டி யு மாவட்ட செயலாளர் துரைசாமி துணைத் தலைவர் சிற்றம்பலம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். வரும் தேர்தலில் மதவாத கட்சியான பிஜேபியை தோற்கடிப்பது, திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெற பிரச்சாரம் செய்வது, இடதுசாரி வேட்பாளர்களை வெற்றி பெற உதவி செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்.