குடியரசு தினத்தையொட்டி போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் சென்னை ஐஜி தேன்மொழி, ஏஎஸ்பிகள் அரியலூர் ரவி சேகர், செங்கல்பட்டு பொன்ராமு ஆகியோருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.