அரியலூர் நகராட்சி அலுவலகம் அருகில் நகராட்சி AITUC செயலாளர் ரெ.நல்லுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி பணியாளர் சம்மேளன மாநில செயலாளர் த.தண்டபாணி சிறப்புரை ஆற்றினார். AITUC கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் G.ஆறுமுகம், T.ஜீவா, AITUC துணைத்தலைவர் R.தனசிங் உட்பட பலர் உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் நகராட்சி செ.. மாரியப்பன்,ம. கோபி,க. பெருமாள், பெ. பெரியசாமி, R . வெங்கடேசன்,மு. அமிர்தவள்ளி,பொன்னம்மாள், க. அஞ்சலை, ஆ. ராணி,ம.குருசாமி, ஆறுமுகம், K.நாகூரான்,நாகராஜன், வீ. உஷா, ரா. ராணி, K. சுமதி, ரா.தனலட்சுமி, தே. சின்னப்பொண்ணு, மற்றும் கயர்லாபாத் பெ.பார்த்திபன், ஆலத்தியூர் K.சிவக்குமார், நகர CPI கிளை து.பாண்டியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்.
1) நகர்ப்புறங்களில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக அவுட் சோர்சிங் – சுய உதவிக் குழு ஒப்பந்தம் என குறைவான கூலியில் துப்புரவு பணி செய்து வரும் அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் பணி நிரந்தரம் வழங்கப்பட வேண்டும்.
2) 2016 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டவாறு வேறுபாடின்றி சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். அதுவரை குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948ன் படி தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 62 ன் படி நகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு அகவிலைப்படியுடன் சேர்ந்த ஊதியம் நகராட்சி நிர்வாக
இயக்குனரின் அறிவிப்பானையின் படி வழங்கிட வேண்டும்.
3) பெருகி வரும் ஜனத்தொகை – குடியிருப்புகளினால் அதிகரிக்கும் குப்பைக் கழிவுகள் – சாக்கடைகளை அகற்றிட தேவையான அளவு கூடுதலாக துப்புரவு தொழிலாளர்கள் நியமனம் செய்திட வேண்டும். மாறாக இருப்பவர்கள் மீது தாங்க முடியாத வேலைப்பளுவை திணிப்பதை கைவிடப்பட வேண்டும்.
4) அரியலூர் நகராட்சி நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு 2009 ஆம் ஆண்டில் இருந்து கொடுக்கப்படாமல் உள்ள வட்டியுடன் கூடிய சேமநலநிதி இருப்புக் கணக்கு கொடுக்கப்பட வேண்டும். மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒப்புக்கொண்டவாறு 31 மாதத்துக்கான கலெக்டர் அறிவித்த தினக்கூலி அரியர்ஸ் உடன் கொடுக்கப்பட வேண்டும்.
5) கூட்டுறவு – LIC பிடித்தம் பணம் மாதாந்திரம் செலுத்தாத போக்கினை கைவிட வேண்டும். பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஆர்ப்பாட்டம் முடிவில் அரியலூர் நகராட்சி ஆணையரிடம் சங்க நிர்வாகிகள் சென்று அளித்தனர். உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மாவட்ட ஆட்சியர் மூலமாக முதலமைச்சருக்கு கோரிக்கை மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது.