அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செயலாளர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 15-ஆம் தேதியன்று அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நிறைவேற்று மனு மீதான விசாரணையில் வேல்முருகன், வழக்கறிஞர் பதில் உரையின் நகலை முகவர் இல்லாத காரணத்தால் வழக்கு தாக்கல் செய்து இருந்த பிச்சை பிள்ளை என்பவரிடம் கொடுத்தபோது, அவர் எனது வக்கீல் எம்ஜி பாலசுப்ரமணியன் கூறினால்தான் வாங்குவேன் என்று தெரிவித்தார். இதைப்போலவே எம்ஜி பாலசுப்பிரமணியன் என்பவர் பல இடங்களில் தம்மை வழக்கறிஞர் என்று கூறிக்கொண்டு வருகிறார்.
இதைப் போலவே கடந்த மாத இறுதியில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற குறைதீர் ஆணையத்தில் விசாரணையை முடித்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வெளியே விசாரணை அறையிலிருந்து வெளியில் வரும்போது, ஒரு வழக்கில் புகார்தாரர் தரப்பில் ஒருவர் அவர்களை வழியில் இடைமறித்து வக்கீல் சிங்காரவேலு இந்த மனுக்களை உங்களிடம் கொடுக்கச் சொன்னார் என்று தெரிவித்தார். அப்போது ஆணையத்தின் தலைவர் அந்த வழக்கில் 08-02-2023 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த நாளில் மனு தாக்கல் செய்து கொள்ளுமாறும் தெரிவித்து அவரது அறைக்கு சென்றுவிட்டார். இதைப்போலவே சிங்காரவேலு என்பவர் பல இடங்களில் தம்மை வழக்கறிஞர் என்று கூறிக்கொண்டு வருகிறார்.
தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர், தலைவர் என்று கூறிக்கொள்ளும் எம்ஜி பாலசுப்ரமணியன் கடந்த ஓராண்டு காலத்தில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த சில வழக்குகளில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சில வழக்குகளில் அவர் முகவர் என்பதற்கான முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தாலும், நியாயமற்ற ஜோடிக்கப்பட்ட புகார்கள் என்பதாலும் அவர் தாக்கல் செய்த வழக்கு வழக்குகள் ஓரிரு வழக்குகள் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது. எம்ஜி பாலசுப்ரமணியன் தம்மை முகவர் எனக்கூறி தாக்கல் செய்த நியாயமற்ற புகார்களை, அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தள்ளுபடி செய்த காரணத்தால், ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது சமூக வலைத்தளங்களில் பொது இடங்களிலும் மேற்படி நபர் அவதூறு பரப்பி வருகிறார்.
இதைப்போலவே எம்ஜி பாலசுப்ரமணியன் நடத்தும் தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் என்று கூறிக்கொண்டு சிங்காரவேலு என்பவர், கடந்த 15-02-2023 ஆம் தேதி அன்று அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நாற்காலியில் அநாகரிகமாக உட்கார்ந்து கொண்டே, ஒரு வழக்கில் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர் ஆகியோரிடம் தனது வழக்கை பற்றி எடுத்துரைத்துள்ளார். இது குறித்துவழக்கறிஞர் தமிழ்மணி
ஆணையத்திடம் முறையிட்டபோது, அநாகரிகமாக மேற்படி சிங்காரவேல் பேசியுள்ளார்.
இதனிடையே அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு நிறைவேற்றுகை மனுவை எம்ஜி பாலசுப்ரமணியன் தாக்கல் செய்துள்ளார். இதில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் எதிர் தரப்பினருக்கு ரூ 25,000/- அபராதம் விதிக்க வேண்டும் என்று ஆணையிடும் வகையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019, பிரிவு 72 – ன்படி தாக்கல் செய்யப்படும் நிறைவேற்றுகை மனுவில் உத்தரவை நிறைவேற்றாத நபருக்கு ஒரு லட்சம் வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்க முடியும். ஆனால் இத்தகைய மனுக்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கேட்க முடியுமே தவிர இவ்வளவு தொகை அபராதம் விதிக்க வேண்டும் என்று ஆணையத்துக்கு உத்தரவிடும் அதிகாரம் மனுதாரருக்கு கிடையாது. மேலும் அன்று மாலை சுமார் 5 மணி முதல் 8 மணி வரை எம்ஜி பாலசுப்ரமணியம் மணியனும், அவருடன் சில ஓரிரு அடையாளம் தெரியாத நபர்களும் ஆணையத்துக்கு அருகாமையிலுள்ள 2 தேநீர் கடைகளில் நின்று கொண்டு இருந்துள்ளார்கள். இத்தகைய நடவடிக்கை சந்தேகத்துக்குரியதாக உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி அரியலூர் காவல் ஆய்வாளர் இரவு எட்டு முப்பது மணிக்கு அந்த பகுதிக்கு சென்று வந்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் பாரபட்சமற்ற முறையில் விரைவாக நீதி வழங்கும் வகையில் செயல்பட்டு வரும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை மிரட்டும் வகையில் மேற்படி நபர்கள் இருவரும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். போலி வழக்கறிஞர்களாக செயல்படுவது மற்றும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மிரட்டல் பாணியில் நடந்து கொண்டு, அங்கு அசாதாரண சூழ்நிலை விளைவித்து வருவது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக எம்ஜி பாலசுப்ரமணியன் மற்றும் சிங்காரவேலு மீது காவல்துறையும், மாவட்ட ஆட்சித் தலைவரும் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் அவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.