அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் மேலராம நல்லூர் மற்றும் கீழ ராமநல்லூர் ஆகிய தீவு கிராமங்கள் உள்ளன. முக்கொம்பு மற்றும் கல்லணை ஆகியவற்றில் திறந்து விடும் அதிகப்படியான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் செல்லும் பொழுது தீவு கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பெரிதும் சிரமப்பட்டனர். இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள அழகிய மணவாளன் கிராமத்தில் இருந்து மேலராமநல்லூர் தீவிற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதனை அடுத்து பொதுமக்கள் அச்சமின்றி இத்தியூர் கிராமங்களில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இருந்தபோதிலும் அதிக அளவில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வெள்ளமாக சென்றால் அப்பொழுது பொதுமக்களை காப்பாற்றுவதற்காக டெல்லியில் இருந்து வந்த பேரிடர் மேலாண்மை குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். பருவகால மழைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை கண்டறிந்து, அப்பகுதி மக்களுக்கு தேவையான உயரமான கட்டிட வசதி மற்றும் மழைக் காலங்களில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவதற்கான தன்னார்வலர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிப்பது, தற்காப்பு மற்றும் அத்தியாவசியமான பாதுகாப்பு உபகரணங்களை அந்த காலகட்டத்தில் வழங்குவது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர். அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல், பகுதி வருவாய் ஆய்வாளர் விஜயா, கிராம நிர்வாக அலுவலர்கள் கண்ணதாசன், முருகானந்தம், அருண் காந்தி மற்றும் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.