மத்திய அரசு சார்பில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய திறனறிவு தேர்வு வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஜெயங்கொண்டம் அடுத்த வானவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 8 பேர் தேசிய திறனறிவு தேர்வை எழுதினர். இதில் வெற்றி பெறும் மாணவர்களை தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் செல்வதாக பள்ளியின் தலைமையாசிரியை அமுதா தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேசிய திறனறிவு தேர்வு மிருணாளினி வெற்றி பெற்றார். இதனை அடுத்து தேசிய திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மிருணாளினி என்ற மாணவியை தலைமை ஆசிரியை அமுதா திருச்சி விமான நிலையத்திலிருந்து தனது சொந்த செலவில் சென்னைக்கு அழைத்துச் சென்றார். மீண்டும் சென்னையில் இருந்து ரயில் மூலம் அரியலூர் வந்தனர். ஆசிரியையின் இந்த செயல் மாணவர்கள் மத்தியில் ஊக்கத்தை ஏற்படுத்தியது.