அரியலூர் அடுத்த கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்
பள்ளியில், பதஞ்சலி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், 1,700 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு, ஒன்றரை ஏக்கர் நிலப் பரப்பில் 8 நிமிடத்தில் இந்திய வரைப்படத்தை வரைந்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்.
இதையடுத்து நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பதஞ்சலி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் பொறுப்பாளர் கிருஷ்ணகுமார், உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதற்கான சான்றிதழை அப்பள்ளியின் தாளாளர் கோவிந்தசாமியிடம் வழங்கினார். இந்நிகழ்வில் கீழப்பழுவூர் காவல் நிலைய ஆய்வாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.