அரியலூர் மாவட்டம், செந்துறை தனியார் மண்டபத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் உயர்தர உள்ளுர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
பின்னர் இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உயர்தர உள்ளுர் இரகங்களை பிரலப்படுத்துவதற்கான கண்காட்சியினை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது….
அரியலூர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று அரியலூர் நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் நகராட்சி புதிய பேருந்து நிலையம் சுமார் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசாணை நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகின்ற திராவிட மாடல் ஆட்சியில் ஏற்கனவே அரியலூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டதைப் போன்று தற்பொழுது பொதுமக்களின் சிரமத்தை போக்கும்
வகையில் அரியலூரில் புதிய பேருந்து நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டென்டர் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, விரைவில் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசினார். இந்நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநர் இரா.பழனிசாமி, வேளாண் துணை இயக்குநர் கு.பழனிசாமி, தோட்டக்கலைத் துணை இயக்குநர் ஆனந்தன், வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) குமார், ஊராட்சி மன்றத் தலைவர் செல்லம் கடம்பன், வேளாண் அலுவலர்கள், விவசாயிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.