அரியலூர் மாவட்டம் கீழகாவட்டான்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த்( 36). இவர் தன்னுடைய பொறியியல் படிப்பிற்காக திருமழபாடி கனரா வங்கியில் 2 லட்சம் கடன் பெற்று இருந்தார். படிப்பு முடிந்து கடந்த ஆண்டு நேர்முக தேர்வுக்காக கும்பகோணம் சென்று விட்டு ஊருக்கு வரும் பொழுது திருவையாறு அருகே சாலை விபத்தில் அரவிந்த் இறந்து விட்டார். அரவிந்த் இறந்தவுடன் இறப்பு சான்றிதழ் உடன் அவருடைய பெற்றோர்கள் வங்கியை அணுகி வங்கி மேலாளரிடம் தகவல் தெரிவித்து விட்டனர். ஆனால் வங்கி நிர்வாகம் அரவிந்த் மீதும் அவர் தந்தை மீதும் நாலு லட்சம் ரூபாய் வங்கி கடனை கட்டவேண்டும் என்று அரியலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கில் இறந்து போன அரவிந்தன் மற்றும் அவரது தந்தை பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் ஆஜராக கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. மகன் இறந்து விட்ட விபரத்தை தெரிவித்தும் வங்கியின் வழக்கில் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ள விவகாரம் பெற்றோர் மற்றும் கீழகாவட்டான்குறிச்சி பொதுக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது..