அரியலூர் மாவட்டம் வெற்றியூர் வருவாய் கிராமத்தில் இன்று காலை 1.கிருத்திகா வயது – 15, 2. ஸ்வேதா வயது -12 , 3.உமாபதி வயது-31 ) 4.வைரம் வயது – 47 ) 5.சுதர்சன் வயது -12 , 6.சரஸ்வதி வயது – 49 , 7.மோனிஷ் வயது -7 , ஆகிய மாணவ / மாணவிகள் உள்ளிட்ட 7 நபர்களை விரகாலூர் கிராமத்திலிருந்து வெற்றியூர் செல்லும் போது சாலையில் உள்ள புளிய மரத்தில் இருந்த கதண்டு கடித்துள்ளது. இதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம், அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மோனீஷ் என்பவர் மட்டும் திருமானுர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசொல்லப்பட்டுள்ளார். மேலும் மரத்தில் உள்ள கதண்டை அகற்றுவதற்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் அருகே கதண்டு கடித்து பள்ளி மாணவிகள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதி..
- by Authour
