அரியலூரில் பேருந்து நிலையம் பழுதடைந்ததை அடுத்து அதனை இடித்து புதிதாக கட்டப்பட்டுள்ளதால் தற்காலிகப் பேருந்து நிலையம் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பேருந்து நிலையத்தில் உள்ள நான்கு கடைகளில் நேற்று இரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் கடைகளில் இருந்த பீடி, பிஸ்கட் பாக்கெட், சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவற்றை அள்ளிச் சென்றனர்.
மேலும் அந்த நான்கு கடையில் மொத்தமாக சில்லறை காசுகளை கூட விட்டு வைக்காமல் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பீடி, சிகரெட் திருடர்களை தேடி வருகின்றனர்.