பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. ஒரு மூன்றாம் பாலினத்தவர் உள்பட 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் ஒரு மூன்றாம் பாலினத்தவர் உள்பட 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாநிலத்தில் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டம் 97.45% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது;
97.42% தேர்ச்சி பெற்று ஈரோடு, சிவகங்கை மாவட்டங்கள் 2-ம் இடம் பெற்றுள்ளது;
97.25% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் 3-ம் இடம் பிடித்துள்ளது;
90.47% தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை கடைசி இடம் பிடித்துள்ளது