அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் சிலர் நாட்டு துப்பாக்கி வைத்து சுற்றி திரிவதாகவும் பறவைகளை வேட்டையாடுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகள் வேட்டையாடிய மூன்று பேரை கைது செய்து அவர்களை விசாரணை செய்தனர்.
விசாரணையில்
மீன்சுருட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரன், சுபாஷ், பாபு என தெரியவந்தது. அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியை ஆய்வு செய்தபோது உரிமம் இல்லாமல் பயன்படுத்தியது போலிசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த தா.பழூர் போலீசார், அவர்களிடமிருந்து 2 ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கி மற்றும் அவர்கள் வேட்டையாடிய 4 பறவைகளை பறிமுதல் செய்தனர்.