அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அமிர்தராயன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா என்கிற கார்ல் மார்க்ஸ்(37)திருமணமானவர். இந்த நிைலயில் இவர் முதல் மனைவிக்கு தெரியாமல் 2017ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை 2ம் திருமணம் செய்து கொண்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்த முதல் மனைவி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுமதி் விசாரணை நடத்தி வழக்கு தொடர்ந்தார். அரியலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீூதிபதி செல்வம், சிறுமியை 2ம் திருமணம் செய்த கார்ல்மார்க்சுக்கு சிறுமியை திருமணம் செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறை, முதல் மனைவியை ஏமாற்றுதல், முதல் திருமணத்தை மறைத்தல் என பல பிரிவுகளில் மொத்தம் 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.