அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் தேர்தல் பறக்கும் படையினர், இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நந்தன்(55) என்பவர் வந்த சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி 89 ஆயிரத்து 100 எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணனிடம் வழங்கினர். அதேபோல், செந்துறை அடுத்த அகரம் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய
சோதனையில் அவ்வழியே இருச்சக்கர வாகனத்தில் வந்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பைனான்ஸ் நடத்தி வரும் முருகன் மகன் .இளவரசன்(35) உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த
1 லட்சத்து 34 ஆயிரம் 230 ரூபாய் பறிமுதல் செய்த பறக்கும் படையினர், கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் வசம் ஒப்படைத்தனர்.