Skip to content
Home » அரியலூர்…ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

அரியலூர்…ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் சாலைகள் அமைத்தல், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதுல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.

அதன்படி, செந்துறை ஒன்றியம், சிலுப்பனூர் கிராமத்தில் ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டும் பணியினையும், தொடர்ந்து, தளவாய் கூடலூர் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.18.42 இலட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியினையும், பின்னர், அயன் தத்தனூர் ஊராட்சி முல்லையூர் கிராமத்தில் அயோத்திதாச பண்டிதர் திட்டத்தின்கீழ் ரூ.8.77 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, துளார் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாயவிலை கடையினை திறந்து வைத்து, விற்பனையினையும் துவக்கி வைத்தார். பின்னர், அசாவீரன் குடிகாடு ஊராட்சியில் ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு (பொது விநியோக கடை) அமைக்கும் பணியினையும், தொடர்ந்து கஞ்சமலைப்பட்டி ஊராட்சியில் சிறுகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதியின் கிழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியினையும், பின்னர், மணப்பத்தூர் ஊராட்சியில் சிறுகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதியின் கிழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியினையும், தொடர்ந்து, மணப்பத்தூர் ஊராட்சியில் ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டும் பணியினையும், அதனைத் தொடர்ந்து, சித்துடையார் கிராமத்தில் சிறுகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதியின் கிழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியினையும் துவக்கி வைத்து, பணிகளை தரமான கட்டுமான பொருட்களை கொண்டு விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதன் பின்னர், படைவெட்டிக்குகாடு கிராமத்தில் ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தினை திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

பின்னர், குழூமுர் ஊராட்சியில் சிறுகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதியின் கிழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியினையும், அதனைத்தொடர்ந்து வங்காரம் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.18.42 இலட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியினையும், தொடர்ந்து சிறுகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதியின் கிழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியினையும், பின்னர், நல்லநாயகபுரம் கிராமத்தில்,

சிறுகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதியின் கிழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியினையும், தொடர்ந்து, வஞ்சினாபுரம் ஊராட்சியில் ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு (பொது விநியோக கடை) கட்டடம் கட்டும் பணியினையும், தொடர்ந்து சிறுகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதியின் கிழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியினையும் துவக்கி வைத்து பணிகளை விரைவாக முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, பெருமாண்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.32.05 இலட்சம் மதிப்பீட்டில் மயான சாலையில் சிறுபாலம் அமைக்கும் பணியினையும், நக்கம்பாடி ஊராட்சியில் சிறுகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதியின் கிழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியினையும், தொடர்ந்து சொக்கநாதபுரம் கிராமத்தில் சிறுகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதியின் கிழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து பணிகளை தரமான கட்டுமான பொருட்களை கொண்டு விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.கவிதா, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ஜாகிர் உசைன், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!