அரியலூர் வழக்கறிஞர் சங்கத்தைச் சார்ந்த வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மனோகரன், துணை தலைவர் கதிரவன், துணை செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் கொளஞ்சியப்பன் ஆகியோர் தலைமையில் கூடிய வழக்கறிஞர் சங்கத்தினர் இம்முடிவை எடுத்துள்ளனர்.
அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் முடிவின்படி
(1) சென்னை உ யர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்திட மத்திய அரசு
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் (2),சென்னை உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியும்,
(3) கிழமை நீதிமன்றங்களில் ஃபைலிங் முறையில் வழக்குகளை நீதிமன்றங்களே பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும்
(4) அதற்காக கிழமை நீதிமன்றங்களில் தகுந்த கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தியும்
(5) மாநில அரசு உடனடியாக வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் (6) வழக்கறிஞர் சேமநல நிதியை 25 லட்சமாக உயர்த்திட வலியுறுத்தியும் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பு வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நீதிமன்ற புறக்கணிப்பில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.