அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து, கூட்டுறவுத் துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இரண்டாம் கட்டமாக ரூ.3,07,480/- மதிப்பிலான நிவாரணப் பொருட்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க அரியலூர் மாவட்டத்திலிருந்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நான்கு கட்டங்களாக மொத்தம் ரூ.23,29,400 மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக முதற்கட்டமாக 19.12.2023 அன்று ரூ.2,95,900 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) சந்திரசேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.