அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 175 பயனாளிகளுக்கு ரூ.14.22 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், குருவாடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது. இம்முகாமில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா அவர்கள் முன்னிலை வகித்தார்.