Skip to content

மேட்டுப்பாளையம், புதுக்கோட்டையில் சொர்க்கவாசல் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் செட்டி ஊரணி அருகில் உள்ள அருள்மிகு சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில்
சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று  அதிகாலை  சுந்தர்ராஜ பெருமாள் பரமபத வாசலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில்  பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காரமடை அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி  விழா விமரிசையாக நடந்து வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

நம்மாழ்வார் ,ராமானுஜர்,திருநங்கை ஆழ்வார் ஆகியோருக்கு முதலில் சொர்க்கவாசல் வழியாக காட்சி அளித்தார்.இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரங்கநாத பெருமாளை வழிபட்டனர்

error: Content is protected !!