கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானை பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி கேரள வனத்துறையினர் அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் தமிழக-கேரள எல்லையில் உள்ள பெரியார் புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்டது.
ஆனால் அரிக்கொம்பன் யானையானது அடர்ந்த வனப்பகுதியில் இருந்து தமிழகத்தின் வண்ணாத்திப்பாறை வழியாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மலைப்பகுதிக்கு வந்தது. கடந்த மாதம் 26-ந் தேதி நள்ளிரவில் குமுளி பகுதியில் மக்கள் நிறைந்த பகுதிக்கு யானை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கம்பம் நகருக்குள்ளும் அரிக்கொம்பன் யானை வலம் வரத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து ஒரு வார போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அரிக்கொம்பன் யானையை பிடித்தனர். அந்த யானையை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் விட முடிவு செய்யப்பட்டது. இதற்காக யானையை லாரியில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் நேற்று முன்தினம் அப்பர்
கோதையாறில் முத்துக்குழிவயல் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. முத்துக்குழிவயலில் பெரும்பாலான பகுதி குமரி வனப்பகுதியை சேர்ந்தது. எனவே, அந்த பகுதியில் விடப்பட்ட யானை குமரி வனப்பகுதிக்குள் வந்து விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் மலை பகுதியில் ஏராளமான ரப்பர் தோட்டங்கள் மற்றும் கிராம்பு தோட்டங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் தொழிலாளர்கள் குடில் அமைத்து தங்கி உள்ளனர். மேலும் காணி இன மக்களும் மலை பகுதியில் தான் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் அரிக்கொம்பன் அழகிய இயற்கைச் சூழலில் இடம்பெயர்ந்த பிறகு நன்றாக உணவு அருந்துகிறது. அதன் உடல்நிலை மற்றும் நடமாட்டம் குறித்து தமிழக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர் என வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாகு தகவல்