Skip to content

கோதை ஆற்றின் கரையில் சுற்றி திரியும் ”அரிக்கொம்பன்”….

  • by Authour

அரிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள பல்வேறு வாழ்விடங்களில் கடந்த 13 நாட்களாக உலவி வருகிறது. இந்த காடுகளில் உள்ள புற்கள், செடிகொடிகள் மற்றும் ஓடைகளில் வளர்ந்துள்ள தாவரங்களை உணவாக உண்டு வருகிறது. களக்காடு மற்றும் கன்னியாகுமரி கோட்டங்களுக்குட்பட்ட வன கால்நடை அலுவலர்கள், வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக் காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய 36 முன்களப் பணியாளர்கள் முத்துக்குழிவயல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் யானையின் நடமாட்டத்தையும் மற்ற தொடர்புகளையும் கண்காணித்து வருகின்றனர். யானைக் கூட்டங்களுடனான யானை ஆரோக்கியமாக இருப்பதையும், சோலை மற்றும் புல்வெளி பகுதியில் வசிக்க முயற்சிப்பதையும் தானியங்கி புகைப்பட கருவி மூலம் பெறப்படும் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. ரேடியோ காலர் சமிக்கைகள் மூலமும், தற்போதைய கண்காணிப்பு அடிப்படையிலும், அரிக்கொம்பன் யானையானது 1340 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் உள்ள கோதையாறு ஆற்றின் பிறப்பிடத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் காணப்படுகிறது என வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *