திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில் வளாகத்தில் ரூபாய் 5.66 கோடி மதிப்பீட்டில்
புதிய அர்ச்சகர் பயிற்சி பள்ளி,மாணவர் விடுதி மற்றும் உணவருந்தும் கூடம் ஆகியவை கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இன்று அடிக்கல் நாட்டினார்.
ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்,ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.