Skip to content

புதுகை அருகே அகழாய்வு பணி… மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் கொடும்பாளூரில் உள்ள முசுகுந்தீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் உள்ள பெருமாள் கோவில் எதிர்புறம் இந்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது , அந்தப் பணியினை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் நேரில் சென்று பார்வையிட்டார்.  இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பழனியாண்டி, தொல்லியல்துறை இயக்குனர் அனில் குமார், தொல்லியல் துறை இணை இயக்குனர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.