புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக வரும் நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது சிபிஐ. இருந்தாலும் கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ தாக்கல் செய்த இந்த வழக்கு தொடர்பான அறிக்கையில் கேஜ்ரிவால் குற்றவாளியாக குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் டில்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் நவம்பர் 2-ம் தேதி அன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடதக்கது..