கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் கரூர் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி இமயவரம்பன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது சார்பதிவாளர் சக்திவேல் என்பவரிடமிருந்து கணக்கில் வராத 1 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. கணக்கில் வராத பணத்தின் விவரங்கள் குறித்து, டி.எஸ்.பி இமயவரம்பன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் சக்திவேலிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில், அரவக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறையினரின் திடீர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.