ஜல்லிகட்டு என்றவுடன் அலங்காநல்லூர் நினைவுக்கு வருவதைபோல, சேவல் சண்டை போட்டி என்றவுடன் கரூர் மாவட்டம் பூலாம் வலசு கிராமம்தான் நினைவுக்கு வரும். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பாரம்பரியமாக பொங்கல் திருநாட்களில் 4 நாட்கள் சேவல் கட்டு எனப்படும் சேவல் சண்டை இக்கிராமத்தில் நடத்தப்படுவது வழக்கம். இந்த நாட்களில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டத்தில் இருந்துசுமார் 1 லட்சம் சேவல்களும், 70 ஆயிரம் பொதுமக்களும் கூடுவார்கள்.
இதனிடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேவல் கட்டின் போது, சேவல் கால்களில் கட்டப்பட்டு இருந்த கத்தி குத்தி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கு காரணமாக சேவல் சண்டை நடத்த மாவட்ட நிர்வாகமும், நீதிமன்றமும் தடை விதித்தது. நீதிமன்றம் விலங்குகளுக்கு இடையே சண்டையிடுவது தடை, மற்றும் மிருக வதை சட்டப் பிரிவின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்த உத்தரவையடுத்து சட்ட விரோதமாக சேவல் சண்டை நடத்துகிறார்களா என்று மூன்றாவது நாளாக தீவிர கண்காணிப்பில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.