கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் துறையினர் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் அரவக்குறிச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்துதல் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, அதேபோன்று சைபர் குற்றங்கள் மற்றும் பொருளாதார குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பொதுமக்கள்
இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிவது குறித்தும் விபத்துக்களை எவ்வாறு தடுப்பது குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்து, அதேபோன்று போதை பொருட்கள் தடுப்பு மற்றும் குற்றங்களையும் தடுப்பது பற்றியும், ஆன்லைன் மூலம் பணம் பறிப்பு அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து லிங்க் வந்தால் அதை தொடக்கூடாது ஆன்லைன் மோசடியில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் கருத்துக்களும் கேட்கப்பட்டது.