அப்போது காரில் வந்தவர்கள் ராமர் பாண்டியனை சரமாரியாக வெட்டித்தள்ளி தலையை சிதைத்தனர். கார்த்திக்கையும் வெட்டினர். இதில் ராமர் பாண்டியன் அந்த இடத்திலேயே இறந்தார். உடனடியாக அந்த கும்பல் காரில் தப்பியது.
தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திக்கை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். ராமர் பாண்டியன் உடலை மீட்டு கரூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று காலை அங்கு உடற்கூறு பரிசோதனை நடக்கிறது. எனவே அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஐஜி கார்த்திகேயனும் கரூரில் இன்று முகாமிட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.