கரூர் மாவட்டத்தின் முக்கிய நகரம் அரவக்குறிச்சி. நேற்று மாலை 3.30 மணி அளவில் திடீரென அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்த அதிர்வு15 வினாடியே நீடித்தது. திடீரென தாக்கிய மின்னல்போல இந்த அதிர்வு ஏற்பட்டது. அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஆடியது. கதவு, ஜன்னல்கள் தடதடவென அடித்து மூடிக்கொண்டது.
அலமாரியில் இருந்த பொருட்கள் தானாகவே கீழே விழுந்தன. இதனால் இந்த நிலஅதிர்வ்வு சற்று பலமானதாகவே இருந்தது. அதே நேரத்தில் நில அதிர்வு 15 வினாடி மட்டுமே உணரப்பட்டது. பள்ளப்பட்டி, மற்றும் அரவக்குறிச்சி, தாராபுரத்தை அடுத்த திருப்பூர் மாவட்டம் மூலனூர் சுற்று வட்டாரங்களில் சுமார் 10 கி.மீ. சுற்றளவுக்குஇந்த நில அதிர்வு உணரப்பட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். அதிர்வு உணரப்பட்டது. மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்தனர். வீதிகளில் பதற்றத்துடன் காணப்பட்டனர்.
இந்த நில அதிர்வு ஏற்படுத்திய அச்சத்தில் இருந்து இன்று காலை வரை அந்த பகுதி மக்கள் மீளவில்லை. நில அதிர்வு
ஏற்பட்ட இடத்தில் மீண்டும் அதிர்வு ஏற்படலாம் என்பதால் நேற்று இரவு பெரும்பாலானவர்கள் வீடுகளுக்குள் தூங்கவில்லை. அதிர்ச்சியுடனேயே காணப்பட்டனர்.
அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் மர்ம சத்தம் கேட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பள்ளப்பட்டி மக்கள் கூறும்பொழுது வெடிச்சத்தம் நிலநடுக்கம் போன்று கேட்டது என்றனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று சத்தம் கேட்டதாக சிலர் தெரிவித்தனர், சத்தத்தின் அதிர்வானது தொடர்ந்து இரண்டு முறை எதிரொலித்ததாகவும் சிலர் கூறினர்.
ஆனால் நில நிடுக்கம் ஏற்பட்டதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யவில்லை. கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, க. பரமத்தி, தென்னிலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கல்குவாரிகள் செயல்பட்டுவருவதால் மிகவும் சக்திவாய்ந்த வெடி மருந்துகளை வைத்து பாறைகளைத் தகர்த்ததன் மூலம் இந்த அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்றும் பொதுமக்கள் கூறுகிறார்கள்.