தற்போதைய டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன், அதிமுக ஆட்சியில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். அப்போது மின்துறை அமைச்சராக இருந்த தங்கமணி மீது அறப்போர் இயக்கத்தினர் பல ஊழல் புகார்களை கூறி மனு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து ஏ.கே. விஸ்வநாதன், அறப்போர் இயக்கத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து மிரட்டினாராம். இது தொடர்பாக திமுக ஆட்சிக்கு வந்ததும் அறப்போர் இயக்கத்தினர், தமிழக அரசிடம் புகார் செய்தனர்.
இந்த நிலையில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் பணியாற்றும் ஏ.கே.விஸ்வநாதன் இந்த மாத இறுதியில் பணிஓய்வு பெறுகிறார். அதற்குள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.