பிரபல இயக்குனரான சுந்தர் சி, அரண்மனை படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி வெளியிட்டு வருகிறார். ஹாரர் மற்றும் காமெடி பாணியில் உருவாகி வெளியான இந்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே 3 பாகங்கள் வெளியான நிலையில் தற்போது அரண்மனை படத்தின் 4ம் பாகம் உருவாகவுள்ளது.
இந்த படத்திற்கான அப்டேட்டுகள் சமீபகாலமாக வெளியாகி வருகிறது. முதலில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானமும் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் சம்பள விவகாரத்தில் சுந்தர் சியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக படத்திலிருந்து விலகிவிட்டார். அதனால் சுந்தர் சியே ஹீரோவாக நடிப்பதாக கூறப்படுகிறது.
லைக்கா தயாரிக்கவுள்ள இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நான்கு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். அதில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகிய இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள இரு ஹீரோயின்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.