Skip to content

5 நோட்டு கேட்கும் அதிகாரி.. சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்..

  • by Authour

நன்றி : அரசியல் அடையாளம்….

பொன்மலை சகாயம், ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி, சந்துக்கடை காஜா பாய் 3 பேரும் ஒரே நேரத்தில் சங்கமிக்க சுப்புனி காபி கடை பெஞ்ச் களை கட்டியது. என்ன பாய் எதிர்பார்த்தது போலவே ஈரோடு இடைத்தேர்தல் முடிவு வந்துள்ளதே என்று காஜா பாயிடம் மற்றவர்கள் கேட்க, , இடைத்தேர்தல் முடிவு எல்லோரும் எதிர்பார்த்தது தான், ஆனால் ஒவ்வொரு கட்சிகளும் போடும் கணக்கு வெவ்வேறு மாதிரி உள்ளது என பீடிகை போட்ட காஜா பாய், தொடர்ந்து அதுபற்றி சொல்ல ஆரம்பித்தார்.
ஆளுங்கட்சியை பொறுத்தவரை இதை ஆட்சிக்கு எடை போடும் தேர்தலாக பார்த்தது. அதிமுக உள்ளிட்ட எந்த கட்சிகளும் டெபாசிட் வாங்கக்கூடாது என்று எதிர்பார்த்தது. இதற்காகவே அனைத்து கட்சிகளும் களமிறக்கப்பட்டு, ஒவ்வொரு அமைச்சருக்கும் தலா 4 பூத்துகள் ஒதுக்கப்பட்டன. அமைச்சர்களும் பம்பரம் போல் சுற்றி பணியாற்றினர். அதையும் மீறி, அதிமுக வேட்பாளர் தென்னரசு டெபாசிட் வாங்கியதை, ஆளுங்கட்சி மேலிடம் ரசிக்கவில்லையாம்.
அதிமுகவை பொறுத்தவரை, இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன், சசிகலா என 4 பிரிவாக பிரிந்து கிடக்கிறது. மற்ற 3 பிரிவின் ஆதரவு இல்லாமலேயே 43 ஆயிரத்துக்கும் மேல் ஓட்டு வாங்கியதே பெரும் சாதனை. இனி அதிமுகவின் வருங்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான், என அந்த கட்சியினர் மார் தட்டுகிறார்கள்.
ஓபிஎஸ் அணியினரோ, எடப்பாடி பழனிசாமியின் எதேச்சதிகார போக்கால், அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. கடந்த பொது தேர்தலில் தமாகா வேட்பாளர் யுவராஜ் பெற்ற ஓட்டுக்களை விட இந்த முறை 15,000 ஓட்டுகள் குறைந்து விட்டது. அதிமுகவின் வீழ்ச்சிக்கு காரணம் எடப்பாடி தான் என்று குற்றம் சாட்டுகிறார்கள் என்று காஜா பாய் சொல்லி முடித்தார்.
‘ அது சரி அந்த திருச்சி அதிகாரிய பத்தி திரும்ப திரும்ப புகார் வந்துகிட்டே இருக்கு…’ என காஜாபாய் திரும்பவும் ஆரம்பிக்க… ‘ ‘ பொருட்காட்சி அதிகாரிய பத்தி தான.. நானும் கேள்விப்பட்டேன்.. திருச்சிக்கு 12ம் தேதி சட்டமந்திரி வந்திருந்தார். அவர் 2 நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டார். செய்தி போட்டோவ கவனிக்க வேண்டிய அந்த அதிகாரி மந்திரி நிகழ்ச்சிக்குபோகலையாம்.. கேட்டதுக்கு அவரு வெளியூர் மந்திரி நான் எதுக்கு போகணும்னு கேக்குறாராம்.. அதோட எந்த டிப்பாண்மெண்ட்  போட்டோவ இருந்தாலும் அந்த அதிகாரி பிரஸ்சுக்கு தர்றது இல்லயாம்… கேட்டா நிகழ்ச்சிக்கு 2 ஆயிரம் நோட்டு 5 வந்ததா தான் செய்தி பேப்பர்ல வரணும்னு சொல்லிட்டாராம் அந்த மாவட்ட அதிகாரி என ஸ்ரீரங்கம் பார்த்தா புட்டுபுட்டு வைக்க… சுப்புனிக்காப்பிக்கடை பெஞ்ச் காலியானது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!