மயிலாடுதுறை பூம்புகார் சாலை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசலு மனைவி பர்வதவர்த்தினி(26) இவருக்கும் வெங்கடேசலுவுக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம்தேதி செம்பனார்கோவில் திருமணமண்டபத்தில்நடைபெற்றது. வெங்கடேசலு 2016ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்து பணியாற்றிவருகிறார். தற்பொழுது மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படடை காவல்பிரிவில் பணிபுரிகிறார். ஒன்னரை வயதுகொண்ட தட்சண்யா என்ற பெண்குழந்தை பிறந்துள்ளது. திருமணத்தின்போது வரதட்சனை அதிகமாகக் கேட்டதாகவும் அவர்கள் குறைத்துப் போட்டுள்ளதாகவும் இதுகுறித்து அடிக்கடி பர்வதவர்த்தினியை கணவன் மாமனார் மாமியார் ஆகிய இவரைத்திட்டுவதும் கொலைமிரட்டல் விடுவதும் வாடிக்கையாக இருந்துவந்தது, பலமுறை கணவரிடம் முறையிட்டும் அவரும் சேர்ந்துகொண்டு துனபுறுத்திவந்துள்ளார். மனம் வெறுத்துப்போன பர்வதிவர்த்தினி சென்றவாரம் தனது கைக்குழந்தையுடன் மயிலாடுதுறை மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் நிஷாவிடம் நடந்த கொடுமைகளை எடுத்துக்கூறியுள்ளார். உடனயாக இதுகுறித்து விசாரணைமேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். புகாரைப் பெற்றுகொண்ட மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகவல்லி விசாரணை மேற்கொண்டார், நடந்த சம்பவத்தை விசாரித்து பர்வதவர்த்தினி அளித்த புகாரின்பேரில் குடும்ப வன்முறை செய்து கொலைமிரட்டல் விடுத்ததாக மயிலாடுதுறை ஆயூதப்படையில் பணியாற்றிவரும் வெங்கடேசலு என்பவர்மீதும் அவரது தந்தை புஷ்பராஜ், தாயார் தேன்மொழி கணவர் வெங்ஙகேடசலு உட்பட 3பேர்மீதும் மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவுசெய்து தேடிவருகின்றனர். கடந்த 2 தினங்களாக ஆயுதப்படைக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது