திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி (50). மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி). தற்போது திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆசைத்தம்பி ஏபிஆர்ஓவாக பணியாற்றி வந்தார். கடந்த 8ம் தேதி மதியம் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஆசைத்தம்பி திடீரென மயக்கம் அடைந்து தனது சேரிலேயே சாய்ந்தார். இதனையடுத்து பிஆர்ஓ அலுவலகத்தில் இருந்தவர்கள் ஆசைத்தம்பியை சிகிச்சைக்காக பெங்களூரு கெம்பேகவுடா மருத்துவமனையில் சேர்த்தனர். மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறியிருந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஆசைதம்பி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். மறைந்த ஏபிஆர்ஓ ஆசைத்தம்பிக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஏபிஆர்ஓ ஆசைத்தம்பி மறைவிற்கு etamilnews.com ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது..