Skip to content

ஏப்ரல் 2ம் தேதி தான் சம்பளம், பென்சன்- அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில் சம்பளம்  வரவு வைக்கப்படும்.அதுபோல பென்சன்தாரர்களுக்கும் கடைசி பணிநாளில் பென்சன் கிடைக்கும். ஆனால்  மார்ச் மாதத்திற்கான சம்பளம் மற்றும் பென்சன் ஏப்ரல் மாதம் 2ம்தேதிதான் கிடைக்கம்.

இது தொடர்பாக தமிழக அரசு  விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழக அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 லட்சம் அரசு ஊழியர்கள்/ஆசிரியர்கள் மற்றும் 7.05 லட்சம் ஓய்வூதியர்கள்/குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாத  சம்பளம் மற்றும் ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இந்த ஆண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் 02.04.2025 அன்று வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

error: Content is protected !!